தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து அனைத்து விவரங்களையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு நான் முதல்வன், என்னும் எழுத்தும், அனைத்து மாணவர்களுக்கும் திரைப்படம் திரையிடல் மற்றும் மாணவர்களின் பன்முக திறன்களை வெளியே கொண்டு வருவதற்கான சிறப்பு வகுப்புகள் என பல வகுப்புகள் நடத்தப்படும்.

ஜூன் 1ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பள்ளிகளில் மாணவர்கள் செய்யக்கூடிய பயிற்சிகள் மற்றும் அனைத்து வகுப்புகளும் ஒரு அட்டவணை மூலம் பள்ளி கல்வித்துறை விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதனைப் போலவே பள்ளிகளில் ஜூன் இரண்டாம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி இணையதளம் மூலம் கற்பிக்கப்படும். இந்த பயிற்சிகள் அனைத்தும் பள்ளிக்கு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.