
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் கனவு அணிக்கு கேப்டனாக இந்தியாவின் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்..
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி எளிதாக சாதித்தது. உலக கோப்பை தொடர் முழுவதும் லீக் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பைக்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா என 6 வீரர்கள் கனவு அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் உலகக் கோப்பை கனவு அணியில் ஆஸ்திரேலிய வீரர்களான மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல், இலங்கை வீரர் மதுஷன்கா தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக், கோட்ஸே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ICC team of the World Cup 2023.
– Rohit Sharma is the captain in the team of the tournament. pic.twitter.com/sZPSxqfylj
— Johns. (@CricCrazyJohns) November 20, 2023