கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஐசிசி கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2022-ம் ஆண்டுக்கான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஐசிசி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கனவு அணியை அறிவித்தது. இதில் டெஸ்ட் அணியில் இந்திய அணியில் இருந்து ஒரு வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். இந்த அணியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியான் ஆகிய 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜானி பீஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட மூன்று இங்கிலாந்து வீரர்கள் இந்த இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த 11 பேர் கொண்ட ஐசிசி அணியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. ஐசிசி தனது அணியின் கேப்டன் பொறுப்பை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கையில் கொடுத்துள்ளது.

ஐசிசியின் இந்த ஒருநாள் அணியில் 2 இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இந்த வீரர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இந்திய தொடரில் கேப்டன் பொறுப்பையும் கையாண்டு வரும் நியூசிலாந்தின் டாம் லாதம் விக்கெட் கீப்பராக இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் ஐசிசி அறிவித்துள்ள சிறந்த டி20 அணியில் இந்தியா வீரரான விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும்  ஹர்திக் பாண்டியா ஆகிய 3 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் ஜாஸ் பட்லர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் அணி 2022 :

உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), கிரேக் பிராத்வைட் (வெஸ்ட் இண்டீஸ்), மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (கே) (இங்கிலாந்து), ரிஷப் பண்ட் (இந்தியா) (வி.கீ), பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), நாதன் லியான் (ஆஸ்திரேலியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).

ஐசிசி ஒருநாள் அணி 2022 :

பாபர் அசாம் (கேப்டன்) பாகிஸ்தான், டிராவிஸ் ஹெட் – ஆஸ்திரேலியா, ஷாய் ஹோப் – வெஸ்ட் இண்டீஸ், ஷ்ரேயாஸ் ஐயர் – இந்தியா, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்) – நியூசிலாந்து, சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே, மெஹ்தி ஹசன் மிராஜ் – வங்கதேசம், அல்சாரி ஜோசப் – வெஸ்ட் இண்டீஸ், முகமது சிராஜ் – இந்தியா, டிரென்ட் போல்ட் – நியூசிலாந்து, ஆடம் ஜம்பா – ஆஸ்திரேலியா.

ஐசிசி டி20 அணி 2022 :

ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் கர்ரன், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ரவுஃப், ஜோஷ் லிட்டில்.