பைசன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கூறிய ஒரு வாக்கியம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
“பைசன் தான் எனது முதல் படம்; இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அவற்றை நீங்கள் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை” என்ற துருவ் விக்ரம் கருத்து, பலரால் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உட்பட பலரும் “மகான் திரைப்படம் தான் உங்களுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது, அதை மறக்கக் கூடாது” என விமர்சித்தனர்.
ஆனால் தற்போது 2022 ஆம் ஆண்டில் துருவ் விக்ரம் வெளியிட்ட ஒரு பழைய வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. அந்த வீடியோவில் துருவ், “ஆதித்ய வர்மா என் டெப்யூட் படம் தான், ஆனால் அது ஒரு ரீமேக் படம். மகான் எனது தந்தையை மையமாகக் கொண்ட திரைப்படம், அதில் நான் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. நான் ஹீரோவாக நடிக்கும் உண்மையான முதல் படம் பைசன் தான்” என கூறியிருந்தார்.
இப்போது தான் இந்த வீடியோ காண நேர்ந்தது , 2022 ல் எடுக்கப்பட்டது .
இதை வைத்து பார்த்தால் துருவ் சொல்வதில் நியாயம் இருக்கிறது ! pic.twitter.com/kpv4b6yvqw
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 7, 2025
“>
இதை பார்த்த சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, “இப்போதுதான் இந்த வீடியோ பார்த்தேன்; துருவ் சொல்வதில் நியாயம் இருக்கிறது” என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், முன்பு அவரை தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள் தற்போது மன்னிப்பு தெரிவித்து, துருவின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, துருவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி வருகிறது.
