ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால் நான்கு பேரும் ஒரே யானையால் உயிரிழந்திருக்கலாம் என வன அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அரசின் நடவடிக்கை முடித்த பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே ஜார்க்கண்ட் 2021-22 ஆம் ஆண்டில் யானை தாக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.