இன்றைய டிஜிட்டல் உலகில் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக அஞ்சல் நிலை அக்கவுண்டுகள் இருக்கிறது. அஞ்சல் நிலையத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி உங்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே நீங்கள் அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ள முடியும். அஞ்சல் நிலையத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் சில வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது அஞ்சல் நிலையத்தில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு அக்கவுண்ட் மூலமாக ஆண்டுக்கு நீங்கள் பெறக்கூடிய ரூபாய் பத்தாயிரம் வரையிலான வட்டி தொகைக்கு வரிசலுகை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் ஆன்லைனில் பேலன்ஸ் பார்ப்பதற்கு உங்கள் சேமிப்பு கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருப்பது அவசியமாகும். ஒருவேளை மொபைலில் இணைக்கப்படாவிட்டால் உங்கள் அஞ்சல் நிலைய கணக்கின் சி ஐ எஃப் எம் கொண்டு மொபைல் எண்ணை இணைக்க முடியும். தற்போது பேலன்ஸ் சரி பார்ப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இ- பாஸ்புக் வசதி

1. உங்கள் மொபைல் போனில் அஞ்சல் நிலைய ஆப் டவுன்லோட் செய்து அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்வதன் மூலமாக லாகின் செய்யவும்.

2. பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

3. மினி ஸ்டேட்மென்ட் என்பதை தேர்வு செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

4. பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மென்ட் உள்ள பக்கத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள் அங்கு நேரடியாக பேலன்ஸ் பார்க்கலாம்.

5. ஸ்டேட்மென்ட் பெற விரும்பினால் குறிப்பிட்ட கால வரையறை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

போன் மெசேஜில் மூலமாக பேலன்ஸ் பார்ப்பது எப்படி.?

மெசேஜ் மூலமாக பேலன்ஸ் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ரிஜிஸ்டர் என டைப் செய்து 77 38 06 28 73 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உங்கள் மொபைலில் ரெஜிஸ்டர் ஆன பின்பும் மீண்டும் அதே எண்ணுக்கு BAL என டைப் செய்து அனுப்பினால் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் MINI என டைப் செய்து அனுப்பினால் உங்கள் ஸ்டேட்மெண்ட்டை தெரிந்து கொள்ள முடியும்.

மிஸ்டு கால் சேவை

மிஸ்டு கால் சேவையின் மூலமாக உங்கள் அஞ்சல் நிலை அக்கவுண்டில் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மென்ட் தெரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் 842405 4994 என்ற எண்ணிற்கு கால் செய்து ரெஜிஸ்டர் செய்யவும். அதன் பின் மீண்டும் அதே எண்ணுக்கு  மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆப் டவுன்லோட் செய்து அதில் உங்கள் அக்கவுண்ட் எண் சி ஐ எஃப் எம், மொபைல் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். தற்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை தொடர்ந்து நீங்கள் ஆப்பில் செட் செய்து கொண்டால் தேவைப்படும் சமயங்களில் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்..

போன் பேங்கிங்

உங்கள் மொபைலில் இருந்து 155299 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும். அதில் வரக்கூடிய ஜீவி ஆர் எஸ் வழிமுறைகளை பின்பற்றவும் உங்களுக்கான மொழியை தேர்வு செய்து பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.