புனேவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் தக்துதேஷ் கணபதி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக சங்கஷ்டி சதுர்த்தியை முன்னிட்டு தக்துதேஷ் கணபதி கோவிலில் திராட்சை திருவிழா கொண்டாடப்பட்டது.

அதன்படி கோவில் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்டதோடு 2000 கிலோ பச்சை மற்றும் கருப்பு திராட்சைகளை கொண்டு திராட்சைத் திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மேலும் திராட்சை சீசனை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக இந்த கோவிலில் திராட்சைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.