
நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2000 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுக்களை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை வருகின்ற மே 23ஆம் தேதி முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதோட அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு பலத்தை எதிர்ப்பு வந்த நிலையில் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.