தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வாகனத்தை இன்று தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த சுற்றுலா வாகனம் சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் காலை 7.30 மணியளவில் கிளம்பி ஏற்காட்டிற்கு செல்கிறது. இந்த சுற்றுலா வாகனத்தில் குளிர்சாதனம் இல்லாமல் பயணம் செய்வதற்கு 860 ரூபாயும், காலை மற்றும் மதிய உணவு மாலை திண்பண்டங்கள் மற்றும் தேநீர், குளிர்சாதன வசதி ஆகியவற்றுக்கு 960 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.