ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் அரசு ஊடகமான யூடியூப் சேனலை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட், ரஷ்ய யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. இதற்கு எதிராக ரஷ்யா நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசிலியன் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதமானது உலகத்தில் உள்ள அனைத்து ஜிடிஜியை காட்டிலும் 20 மடங்கு அதிகமான தொகையாகும். ஏற்கனவே ரஷ்ய நீதிமன்றம் கூகுலுக்கு 1200 டாலர் மாதந்தோறும் அபராதம் விதித்திருந்தது.
ஆனால் இதை கூகுள் நிறுவனம் ஏற்கவில்லை. இதன் மொத்த கூட்டு தொகையை 20 டெசிலியன் ஆகியுள்ளது என ரஷ்ய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 டெசிலியன் என்பது 1 என்ற எண்ணிற்கு அடுத்து 34 பூஜ்ஜியங்கள் வரும் கூட்டுத்தொகையாகும். இந்த அபராத தொகையை குறித்து கூகுள் நிறுவனம் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. ரஷ்யாவில் யூடியூப் செயலி தொடர்ந்து நடைமுறையில் உள்ளது ஆனால் ரஷ்ய அரசின் பொது தளம் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. இதனை 9 மாதத்திற்குள் கூகுள் நிறுவனம் முடக்கியதை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அபராதம் இரண்டு மடங்காக விதிக்கப்படும் என ரஷ்ய நீதிமன்றம் எச்சரித்துள்ளது.