மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளின் கடல்சார் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி நரீ’ (Mayuree Naree) என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஓமனி கடற்படையினர் விரைந்து செயல்பட்டு கப்பலில் இருந்த 20 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்;

மீதமுள்ள 3 பணியாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.