சோஷியல் மீடியாவில் இப்போதெல்லாம் ‘பிராங்க்’ (Prank) வீடியோக்கள் என்ற பெயரில் அடுத்தவர்களை அதிரவைப்பது ஃபேஷனாகிவிட்டது. சில வீடியோக்கள் சிரிக்க வைத்தாலும், சில வீடியோக்கள் பார்ப்பவர்களைக் கோபப்பட வைக்கின்றன. அப்படி ஒரு பகீர் பிராங்க் வீடியோதான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​லிஃப்ட் ஒன்றின் தரைப்பகுதியில், அது பாதாளத்திற்குள் விழுந்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தரும் ஒரு 3D பிளாஸ்டிக் ஷீட்டை ஒரு நபர் ஒட்டி வைத்துள்ளார். இதையறியாமல் உள்ளே வந்த ஒரு நபர், லிஃப்ட்டின் தரைப்பகுதி உடைந்து கீழே விழுந்துவிட்டதாக நினைத்துத் தலைதெறிக்கப் பயந்துவிட்டார். உயிருக்குத் துடித்த அவர், பிறகுதான் அது வெறும் பேப்பர் என்று தெரிந்து ஆத்திரத்தில் அதைத் தூக்கி வெளியே எறிந்தார்.

20 விநாடிகளே ஓடும் இந்த வீடியோ, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் அனல் பறக்கச் செய்துள்ளது!