பிஸ்கட்டுகளை வைத்து அயோத்தி ராமர் கோவிலை கட்டியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சோட்டான் கோஷ் மோனு என்பவர் 20 கிலோ பார்லே ஜி பிஸ்கட்டுகளை வைத்து நான்கு அடி உயரத்தில் ராமர் கோவிலின் மாதிரியை தத்துரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளார். வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் இந்த அழகான சிற்பத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.