திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது சதீசும், சந்திரசேகரும் இணைந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் சதீஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இருவரையும் கைது செய்தனர்.