கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் ஜி.எம் நகரில் கனி(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகே பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனிக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் சர்புதீன்(29), ஆசாத்(32) ஆகியிருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சர்புதீனும், ஆசாத்தும் கனியை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த கனியின் அண்ணன் திப்பு சுல்தான், பக்கத்துக் கடை வியாபாரி மோஸ்கான் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் காயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் சர்புதீன், ஆசாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.