திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசெல்வி(42) என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஏல சீட்டு நடத்தி மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் 20 மாதங்களுக்கு பிறகு 1 லட்ச ரூபாய் கிடைக்கும் என கூறினர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் 10 பேர் ஏல சீட்டில் சேர்ந்து மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.

ஆனால் தம்பதியினர் மொத்தம் 18 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ஏலசீட்டில் சேர்ந்த யாருக்கும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் ரமேஷ், ஞானச்செல்வி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.