அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி கண்ணுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதன் அருகே இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் கமலி கண்ணு பெட்டி கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கமலி கண்ணு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கமலிகண்ணு வீட்டிலிருந்த இரண்டு பேரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் கோபமடைந்த கமலி கண்ணு கைது செய்து இருவரையும் விடுவிக்க வலியுறுத்தியும், அரசு டாஸ்மாக் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் அரசு ஊழியர்களை உள்ளே வைத்து மது கடையை பூட்டினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி டாஸ்மாக் ஊழியர்கள் கமலிகண்ணு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கமலி கண்ணுக்கு கூறும் போது, பொய்யான காரணங்களை கூறி எனது வீட்டிற்கு விருந்தாளியாக வந்த இரண்டு உறவினர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவித்து, கடையை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்படி உறவினர்களை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கமளிகண்ணு கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.