கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு 2.32 லட்சம் வீடுகளை அரசு வழங்க உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜமீர் அகமது கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற எட்டாயிரம் கோடி செலவாகும் என தெரிவித்துள்ள அவர் முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். குடிசைப் பகுதிகள் மேம்பாட்டு வாரியமும், ராஜீவ் காந்தி வீட்டு வசதி கழகமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பயனாளிகள் பணம் செலுத்தாததால் பல ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.