தேசிய ஓய்வூதிய திட்டம் மத்திய மற்றும் மாநில அரசர்களுக்கு 2004 ஆம் வருடம் முதலில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் இதன் அம்சங்கள் அனைத்தும் சாதகமாக இல்லை என்று இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவிக்கப்பட்டது.

புதிய மாற்றத்தின்படி 60 வயது எட்ட இருக்கும் அல்லது திட்டத்தை விட்டு வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு என் பி எஸ் அதிகாரிகள் புதிய எஸ்எஸ் வசதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அல்லது ஓய்வு பெற்ற சந்தாதாரர்கள் தங்களுடைய 75 வயது வரை வருடாந்திர பணத்தை எடுப்பதையும் மொத்த தொகையை மாற்றுவதையும் ஒத்தி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் அல்லது தங்களின் விருப்பப்படி வருடாந்திர அடிப்படையில் திரும்ப பெற விருப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.