
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், திமுகவை தங்களுடைய அரசியல் எதிரி என்று அறிவித்த நிலையில் அவர்கள் குடும்ப அரசியல் செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் குடும்ப ஆட்சி செய்யும் திமுகவை மக்கள் துடைத்தெறிவார்கள் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. அதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற செயல் குழு கூட்டத்திலும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக திமுகவினர் விஜயை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் ஐ லியோனி விஜயை தற்போது மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் சர்வதேச அளவில் சிக்சர் அடித்து வரும் நிலையில் உள்ளூர் ரப்பர் பந்தில் சிக்ஸர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து ஒருபோதும் திமுக அச்சப்படாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் தாயிடம் சென்று தந்தை யார் என்று கேட்டால் அந்த தாய் நிச்சயம் பயந்து விடுவார். ஒரு குழந்தை பிறந்து வளர்வதற்கு இத்தனை காலம் ஆகிறது. அந்த குழந்தை படிப்படியாக வளர்ந்து தான் உலகைப் பற்றி அறிய வேண்டும். ஆனால் பிறந்தவுடன் குழந்தை பேசினால் பேய் தான் பிறந்துள்ளது என்று நினைப்பார்கள். அதேபோன்று கட்சி தொடங்கிய 2 வருடத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இது என்ன நக்கலா.? என்று கூறினார். மேலும் நடிகர் விஜயை டுபாக்கூர் என்று மறைமுகமாக திண்டுக்கல் ஐ லியோனி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது