
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் போட்டியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுடன் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இரண்டு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
ஜிங்ஷிடாய்-16 மற்றும் க்யான்குன்-1 என பெயர் கொண்ட செயற்கைக்கோள்கள் இரண்டும் செரேஷ்-1 வகை ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது இந்த ராக்கெட்டின் ஆறாவது பயணமாகும். சீன விஞ்ஞானிகள் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.