தமிழகத்தில் பிளஸ் டூ விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம். மறு கூட்டலுக்கு இதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் மாறும், விண்ணப்ப படிவத்தை வரும் மே 29 முதல் ஜூன் 1 வரை நேரில் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.