தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு எளிமையாக நடந்து கொள்வார் என்பது குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். தான் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்கள், மதிய உணவிற்கு 5 ஸ்டார் ஹோட்டல்களில் இருந்துதான் பிரத்யேகமாக சாப்பாடு வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள் என லலித்குமார் ஓப்பனாக தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் இந்த விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டவர் என்று பாராட்டியுள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பு தரப்பில் அன்றைய தினம் என்ன சாப்பாடு சமைக்கப்படுகிறதோ, அதைத்தான் விஜய் சாப்பிடுவாராம். “அவருக்கு இரண்டு தோசையும், ஒரு வடையும் இருந்தாலே போதும், அதை வைத்தே தன் உணவை முடித்துக் கொள்வார்” என்று விஜய்யின் அசாத்திய எளிமையைக் கண்டு வியந்துள்ளார் லலித்குமார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு மாஸ் நடிகர், சாப்பாட்டு விஷயத்தில் தயாரிப்பாளருக்கு எந்த ஒரு சுமையையும் தராதது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
