
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார்.
தற்போது வயநாடு தொகுதியில் ராகுல் முன்னிலையில் உள்ளார். தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 13 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.