தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலில் சரியாக பணி செய்யாதவர்களின் பட்டியலை திமுக தலைமை தயார் செய்துள்ளதாகவும் இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.