தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பலரும் காத்திருக்கும் நிலையில் 3.10 லட்சம் பேர் புது ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.

அதில் இரண்டு லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் தயாராகி வருவதாகவும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரேஷன் கார்டு வீடு தேடி விநியோகம் செய்யப்படும் என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.