பிரபல பாடகி சின்மயி நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வந்து மோதி விட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இடித்து விட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்துச் சென்றுள்ளது. நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் குளித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள்.