
12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கல்லூரிகளில் சேர்ந்தப் பிறகு மாணவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ₹1000 உதவித் தொகை பெறலாம்.