ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில். திமுக எம்.பி கனிமொழி அவர்கள் நடப்பு ஆட்சியில் வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்படும் அவல நிலை குறித்து மக்களிடையே தெரிவித்து அது குறித்த தனது வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அவர் பேசியதாவது, 

நமது வங்கி கணக்கில் பணம் குறைவாக இருந்தால்(மினிமம் பேலன்ஸ்) அதை  காரணம் காட்டி, பணத்தை நம்மிடம் கொடுத்து வைத்தது போல் நம் கணக்கில்  இருந்தே, நம்முடைய பணத்தை பிடித்தம் செய்து எடுத்து கொள்கிறார்கள்.  நிச்சயமாக ஒன்றியத்தில், டெல்லியில் இந்திய கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது. வந்த பிறகு இந்த வழக்கம் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.