ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் யுபிஐ மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரங்களில் டெபிட் அட்டையை பயன்படுத்தி மக்கள் பணம் டெபாசிட் செய்கின்றனர். இதற்கு பதிலாக ஏடிஎம் அட்டை இல்லாமல் யுபிஐ மூலமாக டெபாசிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.