ராய்ப்பூரைச் சேர்ந்த சாரு பாண்டே என்ற பெண், ரயில்வே, எஸ்பிஐ உள்ளிட்ட 19 மத்திய அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது 23 வயதில் ஒரு நிலையான அரசு வேலையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்கத் தொடங்கிய அவர், தனது விடாமுயற்சியால் இத்தனை தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவருக்குப் பாராட்டு விருது வழங்கப்பட உள்ள நிலையில், அவருடைய இந்த அசாத்திய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பலரும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
#WATCH | Raipur, Chhattisgarh: Charu Pandey, starting her journey at 23 with the dream of a government job, has inspired lakhs of young aspirants by clearing 19 competitive exams, says, “… My family is very happy with this achievement of mine. I am receiving an award for… pic.twitter.com/Zo21tNMxPs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 12, 2026
“>
இருப்பினும், இந்தச் சாதனை இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. அவர் ஒரே ஒரு பணியில் மட்டுமே சேர முடியும் என்பதால், மீதமுள்ள 18 தேர்வுகளில் அவர் வெற்றி பெற்ற இடங்கள் மற்ற தகுதியான நபர்களுக்குக் கிடைக்காமல் வீணடிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் ஈடுபாடு இல்லாமல் இப்படி தொடர்ந்து பல தேர்வுகளை எழுதுவது முறையல்ல என்றும், வேலைவாய்ப்புப் பட்டியல்களில் காத்திருப்போர் பட்டியல் இல்லாத சூழலில் இது மற்றவர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
