
டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் முதுநிலை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அம்மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.