கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே 18 மாதமே ஆன அர்ஷித் என்ற ஆண் குழந்தை, உணவுக் குழாயில் உணவு சிக்கியதால் உயிரிழந்ததாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில், குழந்தையின் உடலில் கபால இரத்தப்போக்கு மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய மற்றும் புதிய காயங்கள், சிகரெட்டினால் சுடப்பட்ட தழும்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, குழந்தை தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
Kerala
2 weeks back, this woman Akhila lied that her child fell down and got injured.
In reality, her Muslim boyfriend Ashkar brutally beat the child. The child died a few days later.
51 injuries and cigarette burns were found on his body.
She and her boyfriend were arrested. pic.twitter.com/RLOJziMjm5
— ︎ ︎venom (@venom1s) June 1, 2026
இதனைத் தொடர்ந்து, குழந்தையின் தாயான அகிலா (24) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்த அஷ்கர் (31) என்பவரை நெடுமங்காடு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இரு கைகளிலும் மாவுக்கட்டுடன் இந்தக் குழந்தை விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலானபோது, சைக்கிளிலிருந்து விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக அகிலா கூறியிருந்தார்.
ஆனால், அது அஷ்கரின் கொடூரத் தாக்குதலால் ஏற்பட்டது என்பதும், அகிலா நடன நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அஷ்கர் தனது முதல் மனைவியையும் இதேபோல் கொடூரமாகத் தாக்கி ஓராண்டாக படுக்கையில் விழ வைத்துள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. குற்றவாளியை விசாரணைக்காகக் கூட்டிச் சென்றபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைத் தாக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாயின் தகாத உறவால் குழந்தை உயிரிழந்த நிலையில் முன்கூட்டியே தாத்தா பாட்டி குழந்தைக்கு ஆபத்து என கூறி குழந்தையை வாங்க முடியாது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் குழந்தை கட்டு போட்டு இருந்த நேரத்தில் கூட அவரது தாய் சிரித்துக் கொண்டே குழந்தையை தூக்கி சென்ற வீடியோவும் வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
