விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் டிக் டாக் பிரபலமான காபி லேம் என்பவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்தவர் காபி லேம்.

இவர் கைதுக்கு பிறகு அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால் அதிகாரிகள் அவரை விடுவித்தனர். 25 வயதான காபி லேம் இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார். இவர் டிக் டாக்கில் 162 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.