அமெரிக்க நாட்டில் உள்ள ஆஸ்டின் என்ற பகுதியில் 16 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் திடீரென இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில் துணை மின் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளாக அங்கு சென்று பார்த்த போது துணை‌ மின் நிலையத்தில் பாம்பு ஒன்று சென்றது தெரியவந்தது. இந்த பாம்பு மின்சார சர்க்யூட்டுகளில் ஊர்ந்து சென்றதால் கரண்ட் கட் ஆனதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மின் நிலையங்கள் முன்பு குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.