
தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் போட்டி தேர்வுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் மாணவர்கள் கிணறுகின்றனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் இனி 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டர்களில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேல்நிலைத் தேர்வை முடித்த பிறகு கோச்சிங் சென்டரில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.