இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்பே வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் பண்டிகை தினங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். அதாவது எந்தெந்த மாநிலங்களில் பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறது அந்த மாநிலத்தில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி தற்போது செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 3 – ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6 – ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 7 – ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 9 – இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 10 – ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 17 – ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18 – வரசித்தி விநாயக விரதம் , பெங்களூரு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 19 – விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அகமதாபாத், பேலாப்பூர், புவனேஸ்வர், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 20 – விநாயக சதுர்த்தி மற்றும் நுவாகை காரணமாக கொச்சி மற்றும் புவனேஸ்வரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 22 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் காரணமாக கொச்சி, பனாஜி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 23 – நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 24 – ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 25 – ஸ்ரீமந்த் சங்கர்தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கவுகாத்தியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 27 – ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 28 – ஈத்-இ-மலித் அல்லது ஈத்-இ-மிலாதுநபி (Bara Vafat) காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
செப்டம்பர் 29 – ஈத்-இ-மிலாட்-உல்-நபி -க்கு பிறகு வரும் இந்திரஜாத்ரா மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் ஜம்மு & காஷ்மீரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை