இங்கிலாந்து நாட்டில் யார்சைக்ஷர் மாகாணத்தில் பிரம்மாண்ட டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கால் தடம் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு பாறை துண்டின் மீது இருந்துள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது “இந்த பாறை துண்டின் மேல் இருப்பது டைனோசரின் இடது கால் தடம். அதன் அளவு 3.3 அடி நீளம் ஆகும். இந்த டைனோசர் உயிரினும் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால் தடம் பதிந்த பாறை துண்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.