
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம விவசாய பண்ணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 3 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். இவரது தந்தை அருகில் விவசாயம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த சிறுமி திடீரென தவறி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர்.
முதலில் மேல் மட்டத்திலிருந்து சிறுமியை மீட்க சுருள் கம்பி முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது பயன் அளிக்கவில்லை. அதன் பின்பு இரும்பு தட்டில் செய்யப்பட்ட மற்றொரு நுட்பமும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த மீட்பு குழுவினர் முதலில் குழந்தைக்கு சுவாசத்திற்கான குழாய் வழங்கப்பட்டது. அதன் பின் கேமராவை கொண்டு கண்காணித்து மீட்பு பணியின் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்