
நாக்பூரில் நடந்த ஒரு சம்பவம் கொடூரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. அதாவது நாக்பூரில் ஒரு கிளினிக் மற்றும் பயிற்சி கல்லூரி நடத்தி வரும் 47 வயது உளவியல் நபர் கவுன்சிலிங் மற்றும் ஆலோசனை என்ற பெயரில் 15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளார். இவர் பயிற்சி கொடுப்பதாக கூறி சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறது.
இவர் கடந்த 15 வருடங்களில் குறைந்தபட்சம் 50 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர் பயிற்சிக்கு வந்த சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அதனை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்து மிரட்டி வெளியே சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததால் தற்போது இந்த சம்பவம் வெளியே தெரிந்த நிலையில் உளவியல் நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.