செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, உண்மையா விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது திமுகவுக்கு.. அது வெட்ட வெளிச்சம் ஆகிட்டு. திமுக விவசாய அணி கடை அடைப்பு போராட்டத்தை நடத்திருக்கிறார்கள். நான் சட்டமன்றத்துல, இந்த தீர்மானத்தோடு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து,  தண்ணீர் திறந்து விட வேண்டும். அதுல அத சேர்க்க மாட்டேன்ன்னு சொல்லிட்டாங்க.

இன்னைக்கு  என்ன அங்க ? தண்ணீர் திறந்து விடாத  கர்நாடக அரசையும்,  தண்ணீர் திறந்து விட முயற்சிக்காத மத்திய அரசையும் கண்டிச்சி தான் சொல்லுறாங்க. அப்போ நான் கொடுத்தது சரியா போச்சில்ல. ஏன் நான் வைத்த கோரிக்கையை ஏத்துக்கல ? ஏன்   தனி தீர்மானத்துல இணைத்துக் கொள்ளவில்லை. இன்னைக்கு விவசாயிகள்கிட்ட நடிப்பு… அந்த நடிப்பு மக்களுக்கு  புரிஞ்சிட்டது, விவசாயிகளுக்கு புரிஞ்சிட்டது.

சட்டமன்றத்துல வேறு மாதிரி நடந்துக்கிறாங்க… அங்க போராட்டத்துல…  கடை அடைப்பு  போராட்டத்துல…  வேறு விதமா நடந்துக்கிறாங்க…  கர்நாடகத்தை கண்டிக்கிற மாதிரியும்,  மத்திய அரசை கண்டிக்கிற மாதிரியும் ஒரு தோற்றத்தை உருவாக்குறாங்க… இதுதான் திமுகவினுடைய மிக பெரிய நடிப்பு என தெரிவித்தார்.

DMK ஆட்சி 15 அமாவாசை தான் இருக்குன்னு பேரவையில் சொன்னீங்க என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆமா, உண்மைதான். எத்தனை அமாவாசை இருக்குது? 25 அமாவாசை இருக்குது. குறைச்சி சொல்லிட்டேன்.  அவ்ளோதான ஆயுள் காலம். 2 ¾ வருஷம் ஆகிப்போச்சி.. இன்னும் எவ்ளோ இருக்குது, அதை வச்சிதான் நான் சொன்னேன், வேற ஒன்னும் சொல்லல என தெரிவித்தார்.