
திருவண்ணாமலை மாவட்டம் விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யாவுக்கு(19) பிரதாப்(25) என்ற வாலிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரதாப் தனியார் லாரி கம்பெனி மேலாளராக வேலை பார்ப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார்.
கடந்த 10 நாட்களாக திவ்யா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக திவ்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து திவ்யாவின் தாய் கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பிரதாப் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.