சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்தால், இது நிஜ வாழ்க்கைதான் என நம்ப முடியாமல், ஹாலிவுட் ஆக்‌ஷன் படக் காட்சி போலவே தெரிகிறது. வீடியோவில், இரண்டு பைக் ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஒரு காரை கையால் குத்துவதும், கையால் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

பாரம்பரிய ரைடிங் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட்டுடன் வந்த அந்த இரண்டு ரைடர்களும், காரை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். ஆனால் கார் டிரைவர் அமைதியாக உள்ளே உட்கார்ந்திருந்தார். அந்த நேரத்தில் நடந்த அடுத்த சம்பவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரைவர் காரிலிருந்து இறங்காமல் நேராக பைக்கின் மீது பாய்ந்து அதை வேகமாக மோதி, ரோட்டில் இழுத்து சென்றார்!

வீடியோவில் அந்த கார் பைக்கை மோதி நிறுத்தாமல், ரோட்டில் நெடுந்தூரம் பைக்கை இழுத்துச் சென்றது. அதனை தொடர்ந்து ரைடர்கள் பின்தொடர்ந்தாலும் எதையும் செய்ய முடியாமல் நின்றனர். இந்த காட்சி பார்வையாளர்களிடையே அதிர்ச்சியையும், வெறுப்பையும் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. “கார் டிரைவர் தன்னைக் காப்பாற்றினாரா? அல்லது அவர் எல்லை மீறினாரா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.