
நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக பட்டா என்பது வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறை சார்பாக வழங்கப்படுகிறது; அதாவது பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலவகை மற்றும் நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற முக்கியமான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் நிலம் வைத்திருப்பவருக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக வீட்டு மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரம், பட்டா வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கான சிறப்பு முகாம் 27 முதல் 28ஆம் தேதி(இன்று) வரை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகமானது இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மாதவரம், ஆர்.கே நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி நகர் பகுதிகளில் முகாம்கள் நடந்தது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி மயிலாப்பூர், மாதவரம், எழும்பூர், பெரம்பூர், விருகம்பாக்கம் பகுதிகளில் நடந்து முடிந்தது. நேற்று அம்பத்தூர், மயிலாப்பூர், மாதவரம், எழும்பூர், விருகம்பாக்கம் பகுதிகளில் நடந்தது. இன்றைய தினம் பெரம்பூர், அண்ணா நகர், மாதவரம், தி நகர், மயிலாப்பூர் மற்றும் சைதை பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.