தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, 2019 தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக ஒரு நரேட்டிவ் செட் பண்ணி மோடிஜி இப்படி…… மோடிஜி அப்படி……  மோடிஜி இதை பண்ணுனாரு….. மோடிஜி அதை பண்ணுனாரு…..  ஆன்ட்டி மோடின்னு  ஒரு நரேட்டிவ் போட்டு  வந்தாங்க…. அப்ப எல்லாம் இவுங்க கருப்பு பலூனை தூக்கிட்டு வந்து  வீட்டுக்கு வெளியே நிப்பாருங்க… கருப்பு சட்டையை போட்டு பாங்க….. கனிமொழி கருணாநிதி அவர்கள்,  ஸ்டாலின் அவர்கள் எல்லோரும் அவர்களுடைய ட்விட்டர்ல  கோ பேக் மோடின்னு போடுவாங்க…

நாம சொன்னோம்…. மோடி அவர்களை தமிழகத்தில் எல்லோருமே மதிக்கிறாங்க, வரவேற்கிறார்கள்.  பாகிஸ்தான்ல பாட்டு வச்சு போட்டுட்டு… எதோ ரெண்டு போட்டுட்டு….. ITவிங் வச்சு போட்டுட்டு…..   கோ பேக் மோடின்னு போட்டுட்டா தமிழகம்  மோடிக்கு எதிரியா ? என சொன்னோம். அப்ப இவங்க என்ன சொன்னாங்க என்றால் ? இல்லை இல்ல IT விங்க் தான் மக்களின் கருத்தை பிரதிபலிக்குது, அதைத்தான் நாங்க போடுறோம்னு சொன்னாங்க.

இன்னைக்கு மோடி அவர்கள் தமிழகத்துக்கு வந்தீங்கன்னா……  நீங்க வணக்கம் எல்லாம் சேர்ந்து வணக்கம் மோடி  என்று 14 லட்சம்… 15 லட்சம்…. 16 லட்சம் ட்விட் போடுவதால், இன்னைக்கு DMKகாரன் சொல்லுறான்…. இல்லை இல்லை  சோசியல் மீடியா வேறு, களம் வேறு என சொல்கிறார்கள். ஐயா நம்முடைய கடைமை என்னவென்றால் ? அந்த பொய்களை அங்கங்க உடைக்க வேண்டும். கடுமையான உழைப்பு…. வேற எந்த  கட்சிகளுக்கும் இந்த அளவுக்கு உழைப்பு இல்லை என தெரிவித்தார்.