
உடல் தகுதி தேர்வில் பிசிசிஐ அனுமதி வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன். உங்களால் ஆறு மாதங்கள் விளையாடாமல் இருக்க முடியும். அதற்கு மேல் சென்றால் நிச்சயம் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுவீர்கள். தற்போது 14 மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட் விளையாட போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.