
உலகிலேயே கூர்மையான மற்றும் அழியாதது என்று வர்ணிக்கப்படும் பண்டைய பிரஞ்சு வாள் காணாமல் போய் உள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. ரோகமடோர் நகரில் 100 அடி உயர பாறாங்கல்லில் பாதி பதிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமையான வாள் திருடப்பட்டதாக உள்ளூர் வாசிகள் நம்புகிறார்கள். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தற்போது வாள் காணாமல் போனதால் தங்களுடைய தலைவிதி எப்படி மாறுமோ என்று அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த வாள் அங்குள்ள மக்களின் அதிர்ஷ்டமாகவும் பார்க்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.