
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் நகரில் 13 வயது சிறுமி திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அந்த சிறுமியை வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அளித்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து ஆறு பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.