மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்புணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது குட் டச் மற்றும் பேட் டச் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது 13 வயது சிறுமி ஒருவர் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி கூறினார். அதாவது அந்த சிறுமியை அவருடைய தந்தை, ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் மாமா என 3 பேர் சேர்ந்து வருஷ கணக்கில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் சகோதரனும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாமாவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதேபோன்று தந்தையும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக கத்தக்கூடாது என கூறி சிறுமியை அடித்து அவர்கள் துன்புறுத்தியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.