ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அரசு வட்டாரங்கள் கூறியதாவது, ஜெ.இ தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தளர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் முதல் 20% மாணவர்கள் அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.ஐ.ஐ.டி களில் சேரலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜெ.இ அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் இதன் மூலமாக டாப் 20 சதவீதமானவர்கள் மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடிகிறது. இதில் முதல் 20% பட்டியலில் வரும் மாணவி அல்லது மாணவர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதேபோல மாநில கல்வி வாரியத்தால் பயின்றவர்களில் முதல் 20% மாணவர்கள் 75% அல்லது 350 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றதால் இந்த வாய்ப்பை பெற முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் அது தொடர்பாக நடைபெற்ற தொடர் ஆலோசனைகுப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட ஜே.இ.இ தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்றுடன் முடிவடைகிறது. வருகிற 24 மற்றும் 31-ஆம் தேதிக்கு இடையே இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை மும்பை ஐகோர்ட் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.